காயத்தின் அகராதி 03

தட்சண்ணியம் காட்டாத தலைவனே
தருமமாக காதலை தந்து விடு
தணலாக என் இதயம் மாறுவதற்குள் -என்
தவிப்பை புரிந்து விடு

தாமதமாக சொல்லிவிடாதே
தாய் போல என் அன்பை இழந்துவிடுவாய்
தாண்டவமாய் என் மனதை
தாக்கி -உனக்குள்ளே பூட்டிக் கொண்டாய்

திசைமாறிப் போனேன் -எனைத்
திருடிய உன் பார்வையால்
திறமையாக எனை சாயத்துவிட்டாய்
தித்திக்கும் உன் நினைவால் திகதி கூட மறந்து திரிகிறேன்

தீண்டாமல் தாக்கும் உன் பார்வையில்
தீர்ந்து போனேன்
தீர்த்தமாக -எனை நீ
தீக்கடன் செய்யும் வரை - உனக்கான காத்திருப்பை
தீயவை என எண்ணாதே

துளசி செடியாய் சுற்றிவந்தால்
துல்லியமாக உன் விழிகளை சரணடைவேன்
துணிந்து சொல் சொல்ல மறந்த உன் காதலை -அல்ல
துடித்துவிடும் என் இதயம் உன் பெயர் சொல்லி

தூறலாய் மனதில் உன் நினைவை தூவிச் சென்று -எனை
தூரமாக தள்ளி வைத்தாய் தொலைவானம் போல்
தூய்மையான காதலை
தூசி போல ஊதிச் செல்லாதே
தூற்றிடுவார் உன்னை ஒன்னார் என்று

தென்றலாய் வந்தாய்
தெம்மாங்கு பாடினாய்
தெய்வம் போல உன்னை நினைத்தால்
தெருவிலே விட்டு சென்றாய்

தேனாக நாவில் ஊறினாய்
தேராக மனதில் ஏறினாய்
தேளாக இதயத்தை குத்தினாய்
தேய்ந்து போகிறேன் காதலெனும் விசத்தால்

தைரியம் இல்லா காதலைக் கொண்டு
தைத்து விடு கிழித்த என் இதயத்தை

தொண்டு செய்தாவது
தொடுத்துவிடு உன் மனதை என்னோடு
தொகுத்துக் கொள்வேன் காதலாக
தொலைத்த இதயத்தையும் மறந்து
தொகை மயில் போல ஆடி உன்னை ஏற்பேன் நெஞ்சோடு

தோற்றமான உன் காதல்
தோழமையாக இல்லை என்றாலும்
தோல்வி என்று நினைக்காமல்
தோய்ந்து விடுவேன் உன் நினைப்பில்

எனக்காக உன் காதல் இருந்தால் .......
தழுவிக் கொள்வேன் தோளோடு
திருடிய காதலை இறக்கச் செய்யாதே உன் நினைப்பால்
நினைவுகள் இனிமையானது என்பதை விட
கொடுமையானவை என்று சொல்லலாம்
நினைவை மறக்கத் துடிக்கும் மனதுக்கு ...

எழுதியவர் : கீர்த்தனா (9-Dec-14, 9:06 pm)
பார்வை : 95

மேலே