காதல் - மதுரைக்கும் நெல்லைக்கும்

இது மதுரைக்காதல் அல்லவா ?

சற்றே வித்தியாசமாக ..
ரோஜாவை விடுத்து ,
மல்லிகை கொடுத்து ..
மயக்க எண்ணினேன் ,
கன்னியை ..

கன்னியா அவள் ?
காதலுக்கெல்லாம் மன்னீ ..
நெல்லைக்காரி அல்லவா ?
அல்வா கொடுக்க ,
எண்ணம் கொண்டவள் ..

தேர்வு வைப்பேன் என்றால் ..
தேரினால் ,
உன் காதலி ..
இல்லையேல் ,
என் வழி என்றால் ..

காளையை ..
அடக்க சொல்லாமல் ,
இருந்தால் சரி ..!!
என்றே மனதிற்குள் ,
முனங்கல் கொண்டவன் ..

சரி என்று ..
தலையை ,
அசைத்த கணம் ..
சோப்பு கரைசலை ,
கையில் எடுத்தவள் ..

இதழ்களில் ..
குழல் வைத்தே ,
ஊதலானால் ..
அந்த அழகை கண்டே ,
உறைந்து நின்றேன் ..

கை தட்டி ,
எழுப்பியவள் ..
காற்றில் மிதக்கும் ,
சோப்பு குமிழிகளை ..
அறுபது நொடிகள் ..

உடையாது ..
கையில் ,
கொள்ள வேண்டும் என்றால் ..
என்னது ,
என்றே இழுத்தவன் ..

இதற்கு ..
காளையையே ,
அடக்க சொல்லியிருக்கலாம் ..
என்றே மனதினில் ,
முனங்கல் கொண்டேன் ..

மதுரைக்காரன் அல்லவா ..!!!
சற்றும் ,
யோசிக்காமல் ..
அறுபது கிலோ அழகினை ,
அசராது தூக்கினேன் ..

சோப்பு குமிழிகளை விட ..
நீ கனமாய் இல்லை ,
என்றவன் ..
அறுபது நொடிகள் தாண்டியும் ,
அவளை கீழே இறக்கவில்லை ..

அசந்து போனால் ..
அல்வாக்காரீ ,
நெல்லைக்காரீ ..
பிறகு என்ன ,
காதலியானால் ...

காதல் ..
திருமணம் ,
வரை செல்ல ..
காதலி ,
மனைவியானால் ..

சும்மாவா ,
சொல்ல வேண்டும் ..
மல்லிகையும் அல்வாவும் ,
சேர்ந்தால் ..?????
இன்பம் தானே ..!!!

அழகாய் நகருது ..
எங்கள் ,
மன வாழ்க்கை ..
வருடங்கள் ,
கடந்தாயிற்று ..

இன்றும் ..
சண்டை ,
வரும் நேரங்களில் ..
அவளிடம் கூறும் ,
ஒரே வார்த்தை ..

அன்று ..
உன்னை சுமந்ததற்கு ,
சோப்பு குமிழியை ..
சுமந்திருக்கலாம் ,
என்று ..

அவளுக்கு ,
வருமே கோபம் ..
அந்த நொடிகள் ..!!!
அவளை ,
ரசிக்க தவறியதில்லை ..

காதல் ,
அழகு..
காதல் திருமணம் ,
அழகிற்கு எல்லாம் ,
அழகு ..!!!

ஆதலால் ,
காதல் கொள்வீர் ..!!!

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (9-Dec-14, 9:17 pm)
பார்வை : 107

மேலே