ஹைக்கூ சென்றியு கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !


வாழ்வாங்கு வாழ்ந்தால்
வரலாற்றில் இடமுண்டு
நாயுக்கும் !

தேய்பிறையாய் பண்பாடு
வளர்பிறையாய் சீரழிவு
நவீனயுகம் !

காரணியானது
கோழி விலை குறைவுக்கு
பறவை காய்ச்சல் !

வேண்டும் கவனம்
வேண்டாம் கவனக்குறைவு
குழந்தையின் காய்ச்சல் !

முதலில் பிறந்தது
முக்காலமும் நிலைத்தது
தமிழ் !

பலரும் தொடங்கி விட்டார்கள்
பாரதத்தில் வங்கி கணக்கு
இருப்பு ?

வீட்டுச்சொத்து நாட்டுக்கு அன்று
நாட்டுச்சொத்து வீட்டுக்கு இன்று
அரசியல்வாதிகள் !

பஞ்சமில்லை
ஏமாளித் தொண்டனுக்கும்
ஏமாற்றும் தலைவனுக்கும் !

ரசிப்பது தவறல்ல
பறிப்பது தவறு
மலர்கள் !

தலையில் இருப்பதை விட
இலையில் இருப்பதே அழகு
பூக்கள் !

பக்தர்களிடம் கோடிகள் சுருட்டி
ஆசை ஒழிக்க அருளுரை
சாமியார் !

பயன்படுத்துக
பயன்படுத்திடத்தான்
பகுத்தறிவு !

ஏன் ? எதற்கு ? எப்படி ?
எற்று கேட்டால்
கிடைக்கும் விடைகள் !

அன்பே சிவம்
சிவன் கரங்களில்
சூலாயுதம் ?

பண்படுத்த என்றனர்
புண்படுத்துகின்றனர்
மதவாதிகள் !

இரக்கம் காட்டுங்கள்
எரிந்து விழாதீர்கள்
மன நோயாளிகளிடம் !

கிருமிகளால் வருவன கொஞ்சம்
கவலைகளால் வருவன அதிகம்
நோய்கள் !

உண்பது சைவம் மட்டும்
உணவாகிறது அசைவர்களுக்கு
ஆடு !

பலருக்கும் தெரியவில்லை
வேறுபாடு
அன்பிற்கும் வெறிக்கும் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (9-Dec-14, 9:04 pm)
பார்வை : 73

மேலே