கண்டாங்கி மறைத்திருக்கும் நெஞ்சுக்கூட்டில் சிறை எடு 555

என்னவளே...

வானவில்லாய் வளைந்த
புருவத்தில் கரு மை தீட்டி...

மூன்றாம் பிறை நெற்றியில்
குங்கும பொட்டு இட்டு...

செவ்வரளி இதழ்களில்
புன்னகை பூத்து...

மண்ணில் குதித்தாடும்
பட்டு பாவாடை உடுத்தி...

இல்லாத உன் குறுக்கில்
தாவணி சொருகி...

வாசமில்லா வெள்ளி மொட்டுகளை
கணுக்காலில் அணிந்து...

ஒற்றையடி பாதையில்
என்னை காண ஓடிவரும்...

மருதாணி மனம் கொண்ட
மல்லிகையே...

பாதையில் பூத்திருந்த
மலரெல்லாம்...

உன் பாதங்களுக்கு
மெத்தையாக...

வண்ணத்து பூச்சிகளெல்லாம்
மகரந்தம் தூவி உன்னை வரவேற்க...

கண் சிமிட்டாமல்
உன்னை ரசிக்கிறேனடி...

உன் காதலனாக உன் இதயத்தில்
என்னை சிறை இட்டவளே...

ஒருமுறை கொடடி
எனக்கு விடுதலை...

உன் உச்சி வகிடில்
நான் குங்குமமிட...

மீண்டும் என்னை சிறை
எடுத்து கொள்ளடி...

என்னை உன் கணவனாக...

கண்டாங்கி மறைத்திருக்கும்
உன் நெஞ்சு கூட்டில் என்னை...

விடுதலை கொடுத்து
சிறை எடடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-Dec-14, 8:47 pm)
பார்வை : 430

மேலே