போதும் போதும்

என்னவள்
எப்படி இருப்பாள்? என்று-
என் நண்பன் கேட்டான்.

நான் சொன்னேன் ....

பூமியின் பரப்பில்
பூத்திடும் பூக்களை
எண்ணிவிடலாம்- அவள்
பூச்சூடும் கருங்கூந்தலின்
இழைகளை எண்ணமுடியாது


இரவு வானத்தில் தோன்றும்
நட்சத்திரங்களை எண்ணிவிடலாம் -அவள்
மனத்தில் தோன்றும்
கற்பனைகளை எண்ணமுடியாது


கடலின் ஆழத்தை
கணக்கிட்டுவிடலாம் -அவள்
கருணையின் ஆழத்தை
கணக்கிடமுடியாது.

கோவில்குளத்து
மீன்களின் அழகை -
கொஞ்சநேரம்தான் ரசிக்கலாம் -அவள்
முகத்தில் தவழும் -இரு
விழி மீன்களின் அழகை
ரசிப்பதற்கு இருபத்திநாலுமணி
நேரம் போதாது .

உடலின் அழகை தங்கத்துடன்
ஒப்பிடலாம் -அவள்
உள்ளத்தின் அழகை எதனோடும்
ஒப்பிடமுடியாது .

இன்னும் நான்
என்னவளைப்பற்றிச்சொல்ல
எத்தனிப்பதற்குள்....

பொறாமை உள்ளத்தில்
பொங்க - என் நண்பன்
போதும்
போதுமென்று-தன் காதுகளை
பொத்திக்கொண்டான் .

எழுதியவர் : மா. அருள்நம்பி (9-Dec-14, 9:43 pm)
Tanglish : pothum pothum
பார்வை : 102

மேலே