கவிஞன் ஆனேன்

காதல் கொண்டேன் ! காதல் கொண்டேன் !
உன் மந்திரப் புன்னகையில்
மயக்கம் அடைந்தேன் ;
தேனிதழ் சுவைதனில் எனது
தேகம் குளிர்ந்தது ; காதல் மலர்ந்தது !
பூ பூக்கும் உன் பார்வை புதுப் பார்வை !
பூரிப்பு அடைகிறது எந்தன் உள்ளம் .
வில் , அம்பு , இமை , கத்தியால்
வீரம் இழந்தேன் ; தேகம் மெலிந்தேன் ;
உன் சொல் , பேச்சு , குயில் பாட்டில்
நான் என்னை மறந்தேன் ;
உன்னால் கவிஞன் ஆனேன் ....!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Dec-14, 11:35 pm)
Tanglish : kavingan aanen
பார்வை : 108

மேலே