Dad I am in Love
பள்ளி முடித்து பரவசத் துடன்
துள்ளி கல்லூரி கால் பட
எண்ணி ஆறே மாசம் - அப்பா
கன்னி நான் காத லுற்றேன்
உண்மையில் உடல் பதற மகள்
உச்சந் தலை தடவி - அமைதியாய்
உன் இக்கால முன் னுரிமை
உன் கல்வி முடி பார்க்கலாம்
உத்திரவாதம் கேட்டாள் பின்
ஜாதி பேர் சொல்லி தடை
போடக் கூடா தென - சரி
சொல்லி தட்டிக் கொடுத்தேன்
அம்மா வுக்கு தெரியாமலா
அப்பா விடம் வந்திருப்பாள்
மூவரும் கண்ணாம் பூச்சி
ஆடியே நாட்கள் நகர்ந்தன
ஆண்டுகள் பல ஆயின
படிப்பில் சிறந்து நல்ல
பணியில் அமர்ந்து பின்
துணிந்து எதிர் கொண்டாள்
கொடுத்த வாக்கு மீறுவாரோ
அடுத்தது இருவீட்டார் இணந்தே
திருமணம் முடித்தனர் - பதினோரு
அண்டுகள் இனிதே வாழ்க்கை
காதல் வாழ்க! தொடர்ந்தால்
கானல் அல்ல - எதற்கும்
காலம் உண்டு பொறுத்து
இலகுவாய் வாழ்க்கை பழகு
==================================
பின் குறிப்பு: சப்பென்று இருந்தால் விடுங்கள்.
இதுதான் நான் கண்ட நிஜக் காதல்...