புன்னகை புரிந்திருக்குமா

~~~~~புன்னைகை புரிந்திருக்குமா?

நள்ளிரவு அல்ல
பட்ட பகல் வெட்ட வெளிச்சம்

காரிருளும் இல்லை
கண மழையும் இல்லை

பூமியில் மக்கள் நடமாட்டம்
வழிப்பறியும் இல்லை

தென்றல் காற்றும் வீசல
சடுதியான வெப்ப புழுக்கம்

ஆயிரத்தெட்டு வேலை
ஆபிசில சொட்ட மண்டையன் தொல்லை

அறக்கபறக்க வெளியால வந்தால் .....

அடக்கடவுளே

மார்கழிப் பனிபோல
குளிரோட என் நெஞ்சம் ..

இதயம் லப்டப் என்று
டப்பு டப்பு என்று அடிக்குது
ஒருபக்கம் துடிக்குது

வெட்கமே தெரியாத மூஞ்சில
புதுசா பல்லு முளைச்ச பல்லி போல
அம்புட்டு வெட்கம்

பொடிநடையில இருந்த நடைகூட
மெல்லநடை போட்டு மென்மையாகா நடக்குது

டென்சனாக இருந்த மூளையும்
பிறிச்சில் வைச்ச ஆப்பிள் போல
சும்மா ஜில்லென்னு

கைக்குட்டையால் கன்னம் வழிந்த
வியர்வையைத் துடைத்து
சூப்பரா இல்லாட்டியும் சுமாராக இருக்கணும் என
மனம் நினைக்க

அல்லிராணிப் பொண்ணு போல
விழிகள் இரண்டும் விறப்பாக

கொஞ்சம் தேன் வழிய
கெஞ்சும் சிரிப்பால் ஒரு புன்னகை உதட்டோரம்

பள்ளிக்காதலன்
பழையது மறந்திருக்க மாட்டன் என்று .....

எழுதியவர் : கீர்த்தனா (10-Dec-14, 1:52 pm)
பார்வை : 102

மேலே