யாதுமாகி

காளியை வணங்கியவனே
கண்ணமாவை கனவு
காதலியாக ஏற்றவனே
கண்ணனை தாலாட்டியவனே
குயிலை பாட வைத்தவனே
பெண்களை போற்றியவனே
மக்கள் மனதில் இருந்த
அறியாமை இருளை அகற்றியவனே
ஜாதிகள் இல்லையடி என்றவனே
தமிழர் மனதில் உன் பாடல் மூலம்
விடுதலை உணர்வை தூண்டியவனே
செந்தமிழை உயிராய் கொண்டவனே
நான் ஒரு தமிழன் என்று
தலை நிமிர்ந்து சொன்னவனே
உன் அழகிய மீசையால்
என்னை கவர்ந்தவனே
முண்டாசு கவிஞனே
நீ மட்டும்தான் கண்ணனை போற்றுவாயா
இதோ நான் உன்னை போற்றுகிறேன் என் கனவு காதலனே
நான் நின்னை சரணடைந்தேனடா
உன் உடல் இன்று இல்லை
என்றாலும் நூற்றாண்டு கடந்தும் உன் பாடல் மூலமாக
என்னுள் யாதுமாகி நிற்கின்றாயடா.....