என் விடியல்
விழிப்பு கடிகை அலறிட்ட போதிலும்
விழித்திட விழையவில்லை கயல்விழி காணாமல்..!
விடியலில் ஓர் கணா உன் முகமதியை காட்டிட
வியப்பில் ஒரு வினா நான் மதிமயங்கி எழுந்திட
நீயின்றி இங்கு தனியாக விதியவளை சாடுகிறேன்!
வழியின்றி எனக்கு துணையாக மதுவவளை நாடுகிறேன்!