பணம் ஒரு குரங்கு

பணம் இல்லாத போது
ஹோட்டல்ல வேலை செஞ்சாலும்
வீட்ல வந்து சாப்பிடுகிறான்
பணம் இருக்கும் போது
வீட்டுல சமைச்சாலும்
ஹோட்டல்ல போய் சாப்பிடுகிறான்..

பணம் இல்லாத போது
வயத்தை நிரப்ப சைக்கிள் ல போறான்
பணம் இருக்கும் போது
வயத்தைக் குறைக்க சைக்கிள் ல போறான்..

பணம் இல்லாத போது
சோத்துக்காக அலைகிறான்
பணம் இருக்கும் போது
சொத்துக்காக அலைகிறான்..

பணம் இல்லாதபோது
பணக்காரனாக நடந்து கொள்கிறான்;
பணம் இருக்கும் போது
ஏழையாக காட்டிக் கொள்கிறான்…

நிம்மதியாக இருக்கும் போது
பணத்தைத் தேடுகிறான்
பணம் இருக்கும் போது
நிம்மதியை தேடுகிறான்..

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (10-Dec-14, 11:47 pm)
Tanglish : panam oru kuranku
பார்வை : 133

மேலே