கோடி அழகு
ஒளிந்துகொண்டு பார்க்கிறதோ
இல்லை ஒய்யாரமாக பார்க்கிறதோ
பயந்துபோய் பார்கிறதோ
இல்லை பயமுறுத்தப் பார்க்கிறதோ
யாரிவனென நினைக்கிறதோ
யாராயிருந்தால் நமக்கென்ன
என்று நினைக்கிறதோ
என்னவாயிருந்தால் என்ன
இயற்கையின் எழிலில்
இந்த ஓணானும் ஓரழகுதான்
அதற்காக நீங்கள் எனக்கு
ஓணான்டி புலவனென்று
பெயர் வைத்துவிடாதீர்கள்
நான் ரசித்ததை
புகைப்படம் எடுத்தேன்
எடுத்ததை ரசித்து
எழுதினேன்
காதலியை ஏமாற்றும்
காதலனைவிட
காதலனை ஏமாற்றும்
காதலியைவிட
இந்த ஓணான் கோடி அழகு

