மலை வாழ் மேகங்கள்
மலை வாழ் மேகங்கள்...!
குளிரும் மலை மேலே
பனிப் போர்வையா மேகம்,
மிளிரும் வண்ணப்பூவின்
அழகைக் கூட்டிடும் தாகம்,
மனமே ஓ மனமே சுமை மறந்திடு,
சிறுபுல்லே புயல் தாங்கும் நீ புறப்படு...!
அனுதினமும் புதுவானில்
வண்ண வண்ண புதுக்கோலம்,
சுழலுகின்ற பூமி மேலே
காலை பாடும் பூபாளம்,
தாய்மடி போல்
இந்த மண் மேலே உனை மறந்திடு..!
தினம் புதிதாய் பூப்போல இமை திறந்திடு...!
பிறவி எடுப்பேன் நான்
துள்ளி துள்ளி அணில் போலே,
கனி ருசி அறியா மரம் போல,
தியாகத்தில் பாயும் நதி போல,
பிறர்க்காய் வாழ்வை
முழுதாய் நீயும் படைத்திடு...!
மழை மேகம் போல தன்னைக் கொடுத்திடு....!

