நீயின்றி

நீ வரும் நேரம்
குயில்களும் கூவும்
வாழ்வின் தேடல்
உனைத் தொடர்ந்தோடும்
உன் வருகைக்கென்றும்
பாதைகள் ஏங்கும்
பாக்யம் செய்தேனென்று
பூமியும் நாணும்
நீ கண்விழித்தால்தான்
வையம் பார்வையால் வாழும்
கணங்கள் யாவும்
உன்னால் ஓடும்
நீ நின்றுபோனால்
வாழ்வது சூன்யம்
என்னுயிர் அன்பே
எனை மறவாதே நீ

எழுதியவர் : வாகை வென்றான் (11-Dec-14, 11:23 am)
Tanglish : neeyindri
பார்வை : 82

மேலே