நிலவை உதிர்த்த உன்னை

மாலையில்,
என் நடை கடக்கும் தூங்குமூஞ்சி மரங்கள்
இலைகளின் உடல் மடித்து
எப்பொழுதும் உறக்கத்தின் பிடியில்..

இளஞ்சிவப்பில் பூக்கள் கண் திறந்திருக்க,
இலையொன்றை கிள்ளிப் பார்த்தேன்
இறுக மூடிக்கொண்டன நரம்புகள்..

மயங்கும் வெண்ணிலவின் ஒளியில்,
மூடியிருக்கும் உன் இமைகளினூடே
காமம் கசிந்து அந்நிலவை நனைப்பதறியாமல்,
விருப்பமற்று கண்மூடிக் கிடக்கிறாய்..

நாளை முதல்,
என் நடையின் மொழியை காலையாக்கி,
நிலவை உதிர்த்த உன்னை
வியக்க விளைகிறேன்..

எழுதியவர் : அகிலா (10-Dec-14, 8:39 pm)
பார்வை : 68

மேலே