பெண் எனும் நதி

மலையினின்று நழுவி,
பூமியை தழுவி,
விரைவாள் அருவி,
நதியாக நாமம் மருவி!

பொங்கும் நுரையே சிரிப்பு,
கண்ணுறும் மனதில் வியப்பு!
ஆழம் தெரியா பிறப்பு,
இதுவே நதியின் சிறப்பு!

கற்க வேண்டும் நதியிடம்,
நதியைப் போன்றதே பெண்ணினம்!
சிரித்தாலும் பேசினாலும் நம்மிடம்,
மறைப்பாள் தன் மனதை வேறிடம்!

அறிந்தார் பெரியோர் அன்றே,
நதியும் பெண்ணும் ஒன்றே!
கங்கை.யமுனை என்றே...
வைத்த பெயரும் நன்றே!!

எழுதியவர் : meenatholkappian (10-Dec-14, 8:24 pm)
பார்வை : 84

மேலே