அடிச்சு ஊத்துது மழை

செய்வதறியாது திகைத்துப்போய்
தலையெல்லாம் தண்ணீராய்
காக்கை குஞ்சொன்று
கண்டேன். . .
சுண்டுவிரலில் மலையை ஏந்தி
குடையாய் செய்த
கண்ணன் கதை நியாபகத்தில்
சிரித்துக்கொண்டேன். . .
நான்கு சுவற்றுக்குள்
கறைகிறேன் நான்
நான்கு சுவரில்லாமல்
கரைகிறாய் நீ. . .