வீரம் விளைத்தவனே

நம்தமிழ் நாட்டினிலே- பொருள்தரும்
நயத்தமிழ் பாட்டினிலே
சிந்தினைத் தந்தவனே- விடுதலை
சிந்தனை தந்தவனே
கந்தக பூமியிலே- தமிழிலும்
கந்தகம் தந்தவனே
சந்தம் படைத்தவனே-எழுச்சியை
சந்ததம் படைத்தவனே
நிந்தா துதிசெய்தே-சிவசக்தி
நில்லடி என்றவனே
தந்தையர் நாடென்றே- உணர்ச்சியை
தணலெனத் தந்தவனே
காக்கைச் சிறகினிலே-கருனிறக்
கண்ணனைக் கண்டவனே
காக்கை குருவிகளும்- உறவென
கவிதைகள் படைத்தவனே
வாக்கிற் சிறந்தவனே- இளசையில்
வந்து பிறந்தவனே
யாக்கும் தொழிலொன்றே- தனதென
இசையினைத் தந்தவனே
வசன கவிதைஎன-புதுகவி
வழியினை வகுத்தவனே
விசன கவிதைஎழ- மனதினில்
வீரம் விளைத்தவனே
இசைநம் கவிதைஎன-புதுப்புது
யாப்பினைத் தந்தவ்னே
அசைவிலா மனத்தாலே- எமனையும்
அடியால் உதைத்தவனே….

எழுதியவர் : சு.ஐயப்பன் (11-Dec-14, 5:18 pm)
பார்வை : 85

சிறந்த கவிதைகள்

மேலே