பாரதி

மொழியாலும்
தன் உளியாலும்
புது புரட்சி செய்தவன் !

வலியாலும்
இரு விழியாலும்
கண்ணீர் வடித்த பெண்களின்
துயர் துடைத்தவன்!

மதியாலும்
பல விதியாலும்
கருத்து கூறியவன்
என்றாலும் ,

தன் எழுதுகோல்
சிந்தும் கண்ணீரால் ,
தமிழ் மண்ணில்
புது(க)விதை விதைத்தவன்
எம் கவிஞர் !

- தமிழ் குட்டி.

எழுதியவர் : தமிழ் குட்டி (11-Dec-14, 7:57 pm)
Tanglish : baarathi
பார்வை : 64

மேலே