திருப்பவைக்கோர் திருப்பாவை - யாழ்மொழி

அங்கனையர் கோமகளே
அழகுநிறை அமராவதியே
ஆயர்பிரான் சேவகியே
ஆழக் காதலினால் - நின்னை
ஆளோலை எழுதினாயோ...
தேவனத் திருமகளே
தேரகனாக உந்தன்
தேவனவன் வந்து
தேங்கணை தொடுப்பானென - நிதம்
தேமா கவிபடைத்த தேவப்புள்ளே...
வனிதையர் குலமகளே
வங்கார வாரிசமே - என்றும்
வாடிடாத வாசிகையே
வாரியனாக உந்தன்
வயவன் வருவானென்று - தினம்
வட்கி தொழுதிட்ட வண்ணக்கொடியே...
பாட்டுடைத் தலைவியே
பாடலோபல மணிந்த பாடலங்கிரியே
பாசமாலைக் கொண் டுனை
பாணிக்கிரணம் புரிந்திட - நின்
பாடச்சுரன் வருவானென்று
பாடிய பைங்கிளியே....
தீம்பூ வினமே
தீஞ்சே றிதழெ
திருவாளன் பதம் சேர்ந்த தீபகாந்தியே
தீநீர் கவியளித்த திருப்பாவையே - நின்
தீவிய கவி என்றும் தீராத டியோ...