காதல் எந்தன் சாபம்
காதல் உலகில் தோன்றியது ஏன் ?
கடவுளும் கூட அதை நேசித்ததால்!!...
அக்காதலை நானோ சுவாசித்ததால் - அது
காற்றை போல் இன்று மறைந்தது ஏன் ?
காதலே உன்னை பிரிந்ததனால் ...
கண்ணீர் துளியாய் உயிர் பிரிகின்றேன் !!..
நான் வாழும் ஒரு நொடிகூட -இங்கு
நரகத்தின் வாயிலை தொடுகின்றேன் !!....
எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமோ..
இப்பொழுது காதலாய் வந்து நிற்கிறது சாபமாய் ....
அன்று பாவமோ எந்தன் ரூபத்தில் .....
இன்று சாபமோ உந்தன் ரூபமாய் !!....