வேலை செய்யாமல்...
கூலி இல்லாமல்
வாடிய காலம் போய்
ஆட்கள் இல்லாமல்
வாடிய காலம் அது !
ஆட்கள் இல்லாமல்
வாடிய காலம் போய்
வேலையே இல்லாமல்
வாடும் காலம் எது ?
எல்லா இலவசங்களையும்
(கை ஏந்தி) பெற்றுக்கொண்டு
வண்ணத்தொலைக்காட்சி
பெட்டியை மட்டுமே
(மின்சாரம் இல்லாமல்) பார்த்துக்கொண்டு
வேலை செய்யாமல் தள்ளும் காலம் இது !