விரிந்த அன்பில் மல்ர்ந்திருப்போம்.

விரிந்த அன்பில் மல்ர்ந்திருப்போம்..

வள்ளல் மொழியோ தெள்ளிய உரைதான்.
உள்ளத்துள் ஒளியை ஒருகணமும் மறவாமை.
மறவாது ஒளியின் வழியிலே...
பழியில்லா பண்பிலே......அன்பிலே.......
அமைதியாம் நோன்பிலே..........
அகம் நிறை சுகத்திலே,
அனகமாம் விரிவிலே......
கனகமாய் ஒளிர்வதும்,
காருண்யம் கனிவதுமாய்,
இனிதே,
இக்கணமும் எக்கணமும்
இருந்திடல் அவசியமாம்!

அதுவே இறவாது வாழ்வதற்கு
ஏற்ற வழிமுறையாம்.

ஒளிமுறையில் வழிபடுவோம்!
ஒளி வழியில் வாழ்வடைவோம்.
விழி நோக்கில் அன்புருவோம்;
விரிந்த அன்பில் மல்ர்ந்திருப்போம்.

பாலு குருசுவாமி.

எழுதியவர் : (10-Apr-11, 9:01 am)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 468

மேலே