அடையாளம்

கை நாட்டு வைப்பதை தவிர வேறு ஒன்றையும் அறியாத தமிழ்செல்வி கூலி வேலை பார்த்து தன் இரண்டு மகன்களையும் படிக்க வைத்து பட்டம் வாங்கி கொடுத்து விட்டாள்.
பிள்ளைகள் தங்கள் பெயருக்குப் பினனால் பட்டங்களின் பெயர்களை போட்டு கொள்வதை பார்த்த போது மகன்களை பற்றி பெருமைப் பட்டுக் கொண்டாள்.

தூரத்து உறவினர்களைப் பார்த்து வர முதல் முறையாக தொடர் வண்டியில் பயணம் செய்தாள் தமிழ்செல்வி.

ரவியும்,அபியும் தொர்வண்டி நிலையம் வந்து வழி அனுப்பி வைத்தார்கள் .
பயணத்தில் ஏற்பட்ட ஒரு சிறு விஷயம் தமிழ் செல்வியை கவலைக் கொள்ள வைத்தது .
மகன்களிடம் அவள் வைத்திருந்த மதிப்பும்,மரியாதையும் நல்லெண்ணமும் சரிந்துவிட்டது .
i
ஒரு மாதம் களித்து ஊருக் திரும்பிய தமிழ்செல்வி தன் மகன்கள் இருவரிடமும் முகம் கொடுத்து பேசுவதைத் தவிர்த்தாள்.ரவியும்,அபியும் காரணம் புரியாமல் தவித்தார்கள் .தாங்கள் எதாவது தவறு செய்திருந்தால் தங்களை மன்னிக்கும்படி இருவரும் தாயிடம் கேட்டார்கள் .
கண்களை துடைத்துவிட்டு மகன்களிடம் சொன்னாள்."நீங்கள் இன்னும் உலகத்தை படிக்கவில்லையாட ? தொடர்வண்டியில் பயணம் செய்தால்,அடையாள அட்டை என்பதை என்னிடம் சொல்லாமல் போய்டீங்களே ! வழி செலவுக்கு வைத்திருந்த பணத்தை வைத்து அபராதம் கட்டினேன் " என்று தமிழ்செல்வி சொன்ன போது....
தாங்கள் இன்னும் உலகத்தை படிக்கவில்லை என்பதை உணர்த்து மீண்டும் மன்னிப்பு கேட்டு கொண்டார்கள் .

எழுதியவர் : (13-Dec-14, 12:27 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : adaiyaalam
பார்வை : 243

மேலே