வார்த்தைகள் இல்லா கவிதைகள்

மேலிருந்து கீழாக
கவிதை வரிகள்........

என் ஜன்னல் கண்ணாடி
வெளிப் புறத்திலிருந்து
வழியும்
மழைத்துளிகள்........

கவிதையை ரசிக்க
வார்த்தை அறிவு வேண்டாம்
வசந்த நினைவு போதும்
என அறிந்து கொண்டேன்......

காரணம்
கவிதை வரிகள் எப்போதுமே அழகு......

அழகை
உணர முடியுமே தவிர
வார்த்தைகளால்
வர்ணிக்க இயலாது

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (14-Dec-14, 1:47 pm)
பார்வை : 130

மேலே