அந்த மான்

நண்பர் பழனி குமாரின் தாக்கம்
அந்தமானில் அந்த மானை
அங்கு நான் பார்த்தேன்
அந்த நேரம் என்னை மறந்தேன்
அப்பொழுது எப்பொழுது என்றேன்
அதை எண்ணிப் பார்த்து
அற்புதம் அடைந்தேன்
அல்லிலே அலைபெருகும்
அலையொத்த வந்தாள்
அகவும் மயிலென
அகன்று நின்றாள்
அகலின் விளக்கென
அக்கினி காட்டினாள்
அச்சிறு இடையென்ன
அல்லித் தண்டோ
அப் பல்லின் வரிசை
அந்துகத்தின் வரிசையோ
அத்திரியின் பாய்ச்சலென
அக்கணத்தின் கண்கள்
அப்பமென வட்டமுள்ள
அழகிய வதனம்
அமுதமோ உன் கன்னம்
அந்தத் தேனூறும் வண்ணம்
அழலின் வெப்பமென
அடர்ந்து எரிந்தாள்
அலங்குதல் அடங்கிய
ஆடற் கலை பயின்றவள்
அலைபாயும் மனத்தினை
அன்று அவள் தந்தாள்
அன்றும் இன்றும் என்றும்
அந்தகன் வரினும் பிரியேன்