மரமா மேகமா

போட்டி: யார் பெரியவன்? மரம் / மேகம் ?

மரம்: கடல் கொள்ளையர்கள் நீங்கள் .
தன் நேர் இல்லாத ஒன்று தண்ணீர்.
தண்ணீர்த் தான் எல்லாக் காலத்திலும் ஒப்பிலா செல்வம் என்பதை உணர்ந்தது உங்கள் கூட்டம்,
பொதுவாக ஓர்க் குறிக்கோளும் இல்லாது காற்றில் அலையும் வெண் பஞ்சு நாடோடிகள்.
தேவை ஏற்படின், கருப்பு முகமுடி அணிந்து,
கார்மேகம் என பெயரிட்டு கொண்டு, திருடி வான் வழி கடத்தி செல்லும் போது,
உங்களுக்குள் இடியாய் மோதி, வெளிச்சத்தை மின்னலாகவும், தண்ணீரை மழையாகவும்
கீழ் சிந்தும் வீணர் கூட்டம் அல்லவா நீங்கள்?

மேகம்: நாங்கள் சிதறி அடிக்கும் தண்ணீரைச் சேர்த்து வைத்து பிழைக்கும் கூட்டம் தானே நீங்கள்.
நீர் நாடி ஓட முடியாது, இருந்த இடத்திலேயே வேர்ப் பிடித்த, ஓர் அறிவு ஜீவன் தானே?
வெறிப் பிடித்த மனிதர் கூட்டம் வெட்டினாலும், கதறி அழக்குட முடியாத பாவப்பட்ட உனக்கேன் திமிர்?

இது கேட்ட மரம், தன்மீதிருந்த மீதி இருந்த மழைத் துளிகளையும் கண்ணீராய்ச் சிந்தியது.
கண்டும் காணாது இருந்தான் மனிதன். ஆறுதல் எதிர்பார்த்த மரம், மனிதனிடம் மாறுதல் எதிர் பார்க்கிறது

எழுதியவர் : (15-Dec-14, 12:49 pm)
பார்வை : 102

மேலே