காலை எனும்

வெள்ளி பூத்த வானில் எதோ
வெள்ளொளி நுழைகிறது

ஆதவன் தன் அலைக்கரம்
கொண்டு கருக்கல் விரட்டியது

பொழிந்த பனியில் ஒழித்த
மலர்கள் இதழ் கொண்டு சிரிக்கிறது
அதில் வழிந்த தேனில் வழுக்கிய
வண்டுகள் களிப்பில் இசைக்கிறது

இருள் கொஞ்சம் சாயம் போக
கோயில் மணி ஒலிகள்
மங்களம் பாடிடுது

தெருமுனை தேநீர் கடையில்
பாராளு மன்றம் தொடங்கியது

தொழில் தேடியும் வாழ்வின்
வழி தேடியும் நகர்வுகள் ஆரம்பம்

காலையை பல கவிஞர்
பாமாலையில் வடித்தாலும்
புதிதாய் சிரிக்கிறது தினமும்
காலை எனும் மழலை

எழுதியவர் : இணுவை லெனின் (15-Dec-14, 1:38 am)
Tanglish : kaalai yenum
பார்வை : 132

மேலே