விவரம் தெரியும் வயசு தொடங்கியது
பிள்ளையார் போட்ட
கதவுக்கு பின்னால்
பதுங்கிக்கொண்டு
அக்கம்பக்கம்
எட்டிப்பார்த்தான் தம்பி
அவன் அக்கா
முற்றத்து நிலாவோடு
ஏதோ கேட்டு
மழை மழையாய்
அழுதாள்
காகிதத்தில்
கப்பல் அல்ல
தூக்குகயிர் செய்தால்
வாசலில் வைத்த
வெண்மலர்களை
கொஞ்சவில்லை
கொச்ச வார்த்தையாய்
திட்டினாள்
திண்ணைமீது
கண்ணீரை அமர்த்தி
வாடினாள்
ஆட்டை பூட்டவிழ்த்து விட்டு
ஒடி பிழத்துக்கொள் என்று சொல்லி
அதன் கழுத்து மணியை கையில்
அவிழ்த்துக்கொண்டாள்
நாய்ச்சட்டியில் முற்களை
அள்ளி வைத்து
போதும் பூண்ணியமென்று
புலம்பினாள்
வெள்ளை நிலா மீது
கல் விச
கல்லை மடியில்
எடுத்து கட்டிக்கொண்டாள்
சூரியன்மீது
காரிமுழிந்து
விடியாமல் இருயென்று
வேண்டிக்கொண்டாள்
வீட்டிற்க்கு வந்து போன
மாப்பிள்ளை வீட்டார்
வைத்துவிட்டுப்போன
மீச்சரை பாக்கெட்டில்
வைத்து சாப்பிட அக்கம் பக்கம்
பார்க்கும் அவனுக்கு
அம்மா
இந்த மாப்பிள்ளை
அமைந்திடுமென்ற
நம்பிக்கையோடு
பாத்திரம் கழுவியதும்
அப்பா
ஊர்காரர்களிடம்
வாங்கிய நாற்காலியை
மாப்பிள்ளை அமைந்ததென்று
ஒப்படைக்கும்
மகிழ்ச்சியும் விளங்கவில்லை
கதவு இடுக்கிலிருந்து
தெருவுக்குள்
நுழைந்தான்
கிழவியொருத்திகிழவியிடமும்
பெண்ணொருத்தி தோழியிடமும்
சிறுமியொருத்தி தாயிடமும்
இளைசனொருவன் தகப்பனிடமும்
மனைவியொருத்தி கனவனிடமும்
மாப்பிள்ளை வயசானவர்,நல்லயில்ல
என சொன்னார்கள்
அதற்க்கு
கிழவனொருவன் கிழவியிடமும்
தோழியொடுத்தி தோழியிடமும்
தாய்யொருத்தி சிறுமியிடமும்
தகப்பன் ஒருவன் இளைசனிடமும்
கணவனொருவன் மனைவியிடமும்
சொன்னார்கள்
குப்பையோ குலானோ
கல்யாணம் ஆனால் சரிதான் என்று
தேவதை போன்ற
சுத்தமான அக்காவின்
எதிர்காலம் பற்றி
பயம் வந்து
வீடு திரும்பிய
தம்பிக்கு
விவரம் தெரியும் வயது
ஆரம்பம் ஆனது