என் மகள்

அகத்தியன் அருளிய
தமிழை விட
என்னவள் நாவில் வரும்
சொற்களே தேனமுது...!
மழலை மொழியில்
மனதை பறித்தவளே...!
தரையில் வந்த
தாரகையே...!
பூன்னகை சிந்தும் பூகம்பமே....!
பெருமிதம் கொள்கிறேன்
நீ என் மகளானதற்கு அல்ல
நான் உன் அன்னையானதற்கு