முரண்பாடு

கட்டி அவள் (காதலி) தந்த முத்தத்தில்
ஓசை இல்லை ! முரண்பாடு
கட்டியவள் (மனைவி) தந்த முத்தத்தில்
ஆசை இல்லை ! முரண்பாடு
சுபத்தை தரும் திருமணத்தில்
ஊடல் இல்லை ! முரண்பாடு
சுகத்தை தரும் முதலிரவில்
கூடல் இல்லை ! முரண்பாடு
மேகம் தந்த மழைநீரில்
ஈரம் இல்லை ! முரண்பாடு
சோகம் தந்த கண்ணீரில்
பாரம் இல்லை ! முரண்பாடு
வயலில் விளையும் பயிரிலே
பதர் இல்லை ! முரண்பாடு
வாழ்வில் நடக்கும் செயலிலே
புதிர் இல்லை ! முரண்பாடு
கவிஞன் வடித்த பாட்டினில்
கற்பனை இல்லை ! முரண்பாடு
கலைஞன் நடித்த பாத்திரத்தில்
ஒப்பனை இல்லை ! முரண்பாடு
கரையைச் சேரும் அலையிலே
நுரை இல்லை ! முரண்பாடு
இறையைச் சேரும் வயதிலே
நரை இல்லை ! முரண்பாடு
நான் படைத்த ஓவியத்தில்
முகமே இல்லை ! முரண்பாடு
அவன் படைத்த நாடகத்தில்
முடிவே இல்லை ! முரண்பாடு