நம் சாரதி
IN MEMORIES...
---
இருபத்தாறு அல்ல
ஆறு வயது குழந்தை அவன்!
நொடிக்கு ஒரு சிரிப்பு மின்னல்!
பேசினாலே லேசாகும் மனது!
சமூக சேவைக்கு சட்டென
இழுத்துப்போவான் யாரையும்!
இதற்குள்ளாகவா முடியவேண்டும்
இப்படியொரு இனிய பிறவி !
இளையோர்க்கு இரங்கும் இதயம் !
முதியோர்பால் அலாதி அன்பு !
நோயுற்றவர் மனநாடி அறிவான்!
மருந்து பாதி அன்பு மீதி என்
இவன் தேற்றியவர்கள் ஏராளம் !
சேவை மனம்,
சீர்கேட்டுக்கு எதிராய்
சேவல் குணம்!
சீர்திருத்தங்களுக்கு
பலவாறு பலரோடு
பலவித படையமைத்தான்!
சேவையில் செம்மலே !
சமூகம் திரும்பிப்பார்க்கும்போது
ஏன் மறைந்து போனாய்?