வலி காதலின் தொடக்கம்

கண் புதரில்
புதைந்து போகிறேன்
கூந்தல் புயலில்
சருகாய் மடிகிறேன்
சிரிப்பு வெள்ளத்தில்
மூழ்கி போகிறேன்
உன் இதய
கூட்டின்
விளிம்பில்
தொங்கி கொண்டிருக்கிறேன்
ஐயோ பாவம்மென்று
கை கொடுத்து விடாதே
உன் அழகை
ரசிக்க இந்த வலி எனக்கு
மிகவும் தேவை...