மாலை

பாதையோரம்
கால் நடையாக தான் நீ வந்தாய்
உன் பின் செல்லும்
கால்நடையாக என்னை மாற்றிநாய்...
தொலைவில் பார்த்தும்
தொலையாமல் நீ வேண்டும்
உன் முகமாய் நான் வேண்டும்
அக கண்ணாடியில்....
சொட்டிவிட்டு போன
உன் அழகை
கண் திறந்து ஏந்தி செல்கிறேன்...
என்றாவது
நீ என் மனைவி ஆனால்
மொத்த அழகையும்
சொட்டிவிடாமல் தாங்கிகொள்கிறேன்...
உன் அழகில் மீண்டு செல்கிறேன்
பாதையோர கால் நடையாய்....