எனக்கான நேரங்கள்

எனக்கான நேரங்கள் எல்லாம்,,
அது உனக்கான நேரங்கள் தானே ம்ம்ம்,,
ஆனால் இன்று
உனக்கான நேரங்களில்
நான் தொலைதூரம் ஆகிவிட்டிருந்தேன்
சீசன் கடந்த
பட்சிகளுக்கு எல்லாம்
அடர்வனம் படர்ந்த சதுப்பு நிலம் என் ஆறடி
என்றோ பொழியும்
பெரும்பொய்யல் ஒன்றினால்
ஏதுமற்று போய்விடுவேன்
அதுவரையுமானவர்களின்
இரசனையிலிருந்து தப்பி ஒருநாள் ,,,ம்ம்ம்ம்
கீறி சமன் படுத்தியவர்களும்
விதைத் தூவியவர்களும்
உரமிட்டவர்களும்
யாரென்று அறியாத ஸ்திதியிலும்
அறுபடும் நேரங்களில்கூட
விடாமல் வேர்ப்பிடித்திருப்பேன்
அனுசரன்