உன் வாழ்க்கைக்காக

அடே பையா .....

அடி வாங்கி
அடி பணிந்து
ஆசைக் காதலால் அலையாதே என் பின்னே ...

உன் புலம்பல் ஒன்றும்
கவிதைகளாய் தோனவில்லை

உன் சிரிப்பு ஒன்றும்
மத்தாப்பாய் வெடிக்கவில்லை

உன் விம்பம்
கனவுகளில் வரவும் இல்லை
கண்களிலும் தெரியவில்லை

நாவும் வலிக்குதடா -உன்னை
திட்டி திட்டி

ஏனோ கடுப்பாக மட்டும் இருக்கு
உள்ளம் -வேறு பெண்களோடு -நீ
பேசும் பொழுது-ஆனா
பிடிக்கவில்லை உன்னை சொட்டும்

உன் உதிரமும் வேண்டாம் -உன்
கண்ணீரும் வேண்டாம்
நீ மட்டும் வேணும் என்று சொல்லவும்
வார்த்தைகள் விடுவதில்லை

என் பின்னே
அலைவது பிடிக்கவில்லை
அடமும் பிடிக்கவில்லை -உனக்காக
என் உள்ளம்

பார்க்காமல் போகவும் எண்ணமில்லை
பார்த்துக் கொண்டு பேசவும் துணிவு இல்லை

நெருங்கி வரவும் பயமா இருக்கு
விலகிச் செல்லவும் பாவமா இருக்கு

கல்லெடுத்து அடிப்பான் அண்ணன்
சொல்லெடுத்து அடிப்பாள் அன்னை
பல்லிலுத்து நடிப்பான் தம்பி
கால் நீட்டி உதைப்பார் அப்பன்

உனக்காக குடும்பத்தை எதிர்க்கவா -அல்ல
குடும்பத்துக்காக உன்னை எதிர்க்கவா

உனக்கு முன் என் நடிப்பான காதலைக்
காட்டவும் விருப்பமில்லை -உன்
உள்ளம் ஏமாறவும் கூடாது

நீ கேட்டாயே எனக்காக என்ன செய்தேன் என்று
சொல்கிறேன் கேளடா

வீட்டோர்கள் முன்னால் -உன்னை
வேண்டாம் என சொல்லி விட்டேன்
எனக்காக இல்லையடா உனக்காக-நீ
என் மேல் கொண்ட அன்பிற்காக

ஓடி விடு எனை திரும்பி பார்க்காமல்
ஓடோடிவிடு !

உன் வாழ்க்கை புனிதமாக இருக்கும்
எனை விட்டு நீங்கி சென்றால்

எழுதியவர் : கீர்த்தனா (19-Dec-14, 4:02 pm)
Tanglish : un vaalkkaikkaga
பார்வை : 162

மேலே