உல்லாசம்தரும் உதிரம்

உதிரத்தில்
உல்லாசம் காணும்
ஒருதலைக் காதல் !

உருக்கம்தான் மனதுக்குள்
உறக்கம்தான் இல்லை

சொன்னாலும் தோல்விதான்
சொல்லாமல் விட்டாலும் தோல்விதான்

விடை கொடுத்துவிடுமே
விதிகளுக்கும் -ஒரு
முற்றுப் புள்ளியாய் வாழ்வில்

கவலை மறக்க பலருக்கு கஞ்சா
கண்ணீர் துடைக்க சிலருக்கு
உதிரம் தான் கைக்குட்டையாய்

வலி பொறுக்காமல்
வழி தேடுகிறார்கள்
விழி சிந்தும் துளி போல
கைவரிசையாக
கரங்களில் இருந்து இரத்தம்

மறு ஜென்மம் தான்
இப் பிறவியில் கிடைக்காத சுகம்
கைகளை அறுக்கும் போது கிடைக்கும்
வெறுப்புக் கொண்டால்

கட்டு மிராண்டிதான்
கண்டதையும் பார்த்தால்
கோபம் வரும்
கொஞ்ச வரும்
கெஞ்சவும் வரும்
புத்தி கேட்டு நினைவால் நிலைத்துப் போனால்

சாவும் இனித்திடும்
இன்பம் இது
வாழ்வும் கசத்திடும்
துன்பமும் இது

இரு விழிகளின் காதலும்
தோற்றுவிடும்
இரு கரங்களின் வெட்டுகளுக்கு முன்பாய்

கண்ணீருக்கு மருந்து
காயங்களுக்கு ஆறுதல்
உணர்வுக்களுக்கு ஒரு உயிர்
உன்னதப் பயணமும் இதுதானோ

நினைவுகளும் உதிரமும்
வாழும் வாழ்க்கையில்
நிலையாமையான காதால் கனவுகளோடு

இதயத்தில் சேரா விட்டாலும்
உதிரத்தில் சேருகின்றன
மறுக்கப்படும் சில உன்னதக் காதல்

அன்பும் அடாவடியாகத்தான் இருக்கும்
ஆசை கொண்ட ஒரு உள்ளத்திற்கு

அலைக்களிக்கவும் வேண்டாம்
அறுந்து போகவும் வேண்டாம்
உண்மை உறவுகள் ...

மறுக்கப்படும் அன்பு-ஒரு காலத்தில்
மறுபரிசீலினை செய்யப்படும்
உயிர்க் காதல் அவலமாக
உலாவும் போது !

எழுதியவர் : கீர்த்தனா (19-Dec-14, 11:07 pm)
பார்வை : 289

மேலே