வாழ்க நீ
கண்ணீருக்கு என்னை
கடனாக கொடுத்து விட்டு
கடைசியில்
அடிமையாகவும்
ஆக்கிக் கொண்டதால்
கண்ணீரின் கண்களில்
ஆனந்தக் கண்ணீரைக்
கண்டேன் ..
என்ற அவளது
கதையைக் கேட்டபின்
கண்ணீர் வரவில்லை ..
வறண்டு விட்ட என்
கண்களில் !
இதயம் அழுவதை
அவளிடம் மறைத்துக் கொண்டு
வாழ்க நீ நலமுடன்
என்று வாழ்த்தி விடை பெற்றேன்!