நினைத்து பார்க்க ஒரு காதல் உன்னால் 555

பெண்ணே....

எத்தனையோ பெண்கள்
உலகில் இருக்கும் போது...

உன்னை மட்டும் எனக்குள்
நினைக்க வைத்தது யார் தவறு...

நினைக்க வைத்தது
உன் தவறென சொல்வதா...

உன்னை நினைத்தது
என் தவறென சொல்வதா...

உன் பார்வை வீச்சியில்
விழுந்த நான்...

உன்னிடம் சொன்னேன்
என் காதலை...

உன்னிடம் இருந்து வந்த
பதில் இருமனதாக...

உன் நினைவுகள் என்னில்
மறைய போவதுமில்லை...

நான் உன்னை மறக்க
போவதும் இல்லை...

உன்னால் எனக்கு ஒரு
காதல் கிடைத்தது...

உன்னோடு சேர்ந்து வாழ
காதல் இல்லை என்றாலும்...

நான் நினைத்து பார்க்க
எனக்கு ஒரு காதல் கிடைத்தது...

உன்னால்...

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Dec-14, 3:15 pm)
பார்வை : 868

மேலே