திரும்பினால் என்ன குற்றம்

வாழ்வே ஒரு திருப்புமுனை
திரும்ப திரும்ப வரும்
இன்பமும் துன்பமும்

இதிலேன் திரும்பினால் குற்றம்

திரும்பும் பக்கமெல்லாம்
நிசப்தம் நூலகமாய்

ஓரக் கண்ணாலும்
உரச முடியேல

எட்டி பார்த்தாலும்
கண்டு பிடித்திடுவார்

வியர்வையும் வழியுது
தென்றலும் துடைக்குது
அருகில் இருப்பதைப் பார்த்து

கைகளும் எழுதாது
ஒற்றையும் நிரம்பாது

வாய் திறந்து கேட்க்கவும்
வாய்மைகள் தடுக்குது

எழுது கோலும் ஏங்குது
எழுதுவதற்கு
ஏறினாள் எழுதிடலாம்
ஏறவே இல்லை

சற்றே திரும்பி பார்க்கிறேன்
சொல்லுக்கு அடங்கா இன்பம்

என்னவனை பார்த்து அல்ல
தோழன் எழுதும் பரீட்சை ஒற்றையை பார்த்து

திரும்பும் போதே திரும்பி விட்டார்
ஆசான்
ஒற்றையோடு திருப்பியும் அனுப்பிவிட்டார்
வீட்டே....

திரும்பினால் என்ன குற்றம் ...

(இவை அனைத்தும் கற்பனையே ..) ஹா ஹா

எழுதியவர் : கீர்த்தனா (20-Dec-14, 1:45 pm)
பார்வை : 190

மேலே