காதல் காலம் 80

தட்டச்சு இயந்திரம் மீது கோபம்
எனக்கு
நீ தட்ட தட்ட

-----------------------------------------------------

இளையராஜா ஹர்மொனிய இசை
ஏ.ஆர் கீ போர்ட் இசை
எது பிடிக்கும் கேட்கிறாய்
தட்டச்சி இயந்திரத்தை
இசைத்துக்கொண்டே ....

-------------------------------------------------------

நான் கணினி பயன்பாட்டியலை
தேர்ந்தெடுத்ததின் காரணம் கேட்கிறாய்
திருட்டு தனமாய் தொட்டு ரசிக்கும்
உன் தட்டச்சு இயந்திரத்திடம் கேள்
அது சொல்லும்
இது
கணினி பயன்பாட்டியல் அல்ல
காதல் பயன்பாட்டியலேன ...

--------------------------------------------------------

ஒவ்வொரு
எழுத்து பிழைக்கும்
காரணம் தேடுகிறாய் நீ
நீ தட்டியும் தடம் புரளாமல்
எப்படி முடியும்
தட்டச்சு இயந்திரத்தால்

---------------------------------------------------------

நீ தட்ட தட்ட
உன் கைரேகையை
களவாடுகிறது
தட்டச்சு இயந்திரம்

எழுதியவர் : (20-Dec-14, 4:49 pm)
பார்வை : 77

மேலே