தேவதையின் சந்திப்பு
தூக்கம்!
நீ
இமைகள் கூடிப்
பிறந்த குழந்தை
தடம் தெரியாமல்
வந்து போகும் தேவதை
உலைத்து அலுத்தவனுக்கு
உன்னத மருந்து
இரு கண்கள் பருகும்
அமிர்தம்
மனிதனின்
மற்றொரு அத்தியாவசியத் தேவை
நான்
என்னையே மறப்பதும்
ஒவ்வொரு நாளும்
புதிதாய்ப் பிறப்பதும்
உன்னால் தான்
உடல்
சோம்பல் முரிக்கும்
மனம்
புதிதாய்ப் பிறக்கும்
உன்னைத் தழுவிய பின்
தூக்கம் இல்லாத
முகத்தில் அழகேது?
கண்ணழகிகும்
மவுசு குரையும்
உன்னைத் தழுவாவிடில்
எப்படித் தூங்குகிரேன்?
எப்படி விழிக்கிரேன்?
விளங்கவில்லை எனக்கு
இதை என்னிப் பார்த்தால்
நீயுமொரு மர்ம தேசமோ?
நாங்கள்
உறங்கும்போது கூட
மூளை வேலை செய்யுமாம்
ஆனால்
எங்களில் சிலர்
உறங்குவதையே
வேலையாய்க் கொண்டுள்ளோம்
அவ்வளவு
மகிழ்வித்து விட்டாயோ
எங்களை?
இமைகள் உனைத்தழுவி
உயிர் பிரிந்தால்
அதுவே சுகமென்பேன்...
உன் அருமை
தெறியுமோ சிலர்க்கு?
மனிதர்கள்
சாதி மதம் அறிவதில்லை
தூங்கும்போது
அறிவாளியுமில்லை
முட்டாளுமில்லை
தூங்கும்போது
சந்தோசப்படுவதில்லை
தூங்கும்போது
துவண்டுபோவதில்லை
தூங்கும்போது
சோர்ந்து கிடப்பதில்லை
தூங்கும்போது
பொறாமைப் படுவதில்லை
தூங்கும்போது
ஏழை-பணக்காரன்
பாகுபாடில்லை
தூங்கும்போது
விஞ்ஞானிக்கும் விவசாயிக்கும்
வித்யாசமில்லை தூங்கும்போது
யார் மனதிலும்
எதுவுமில்லை
தூங்கும்போது
அப்படியானால்
நீயும் ஒரு
தியான நிலைதானோ?
தூங்கும் எவரும்
களவாடுவதில்லை
தூங்கும் எவரும்
ஏமாற்றுவதில்லை
தூங்கும் எவனும்
கற்ப்பழிபதில்லை
சிலர் தூங்குவதிலும்
நன்மைகளுண்டென
அறிந்துகொண்டேன்...
சின்ன
மௌனத்திர்க்குப் பிறகு
உன்னைப் பற்றி
இவ்வளவு கவிதை பாடிய
எனக்கு
முடிக்கத் தெரியவில்லையே
என அவளிடம்
நான் பேசி முடிக்க
எதிர் பாறாத
இந்த சந்திப்பில்
எதுவும் பேசாமல்
மௌனம் காத்தாள்
அந்தக்
கருப்பு தேவதை...
மௌனம் வேண்டாமடி
கருப்பு கற்க்கண்டே
என்றேன்
சற்று நேரம் கழித்து
அவள்
பதில் கூற
இதள் திரக்கையில்
ஒரு சத்தம்
"மணி எட்டு ஆகுது
எழுந்திரி டா" என
அம்மா என்னை எழுப்ப
கண் விழித்துப்
பார்த்தபின் புரிந்தது
தேவதையை சந்தித்ததும்
கவிதை பாடியதும்
கனவென்று...
உனர்ந்தேன்
முடிவில்லாமல் போனது
என் கவிதை மட்டுமல்ல
எங்கள் சந்திப்பும்தான்
அம்மவின் மீது
சின்ன கோபம்
சிரிது நேரம் கழித்து
எழுப்பியிருக்கலாமே என....
சரி...
போகட்டும் விடுங்கள்
மீண்டும் சந்திக்காமல்
போய்விடுவேனா
அந்தக் கருப்பு தேவதையை
அப்பொழுது பேசிக்கொள்கிரறேன்...