கவிதை

சிந்தனை கடலில்
சிக்கிய
ஒரு கைப்பிடி
மண் துகள்களே கவிதை

========================================

எண்ணச் சிதறல்களின்
சிறு தொகுப்பே
கவிதை

========================================

உணர்வுகளின்
ஊடக மொழியே
கவிதை

========================================

பேனாவில் காதல்(மை) ஊற்றி
எழுத்து வடிவில்
காகிதத்தில் பதிவேற்றுவதே
கவிதை

========================================

உருவமில்லா கற்பனைக்கு
உறைவிடம் தருவதே
கவிதை

========================================

அடங்காத சில நினைவுகளை
அடக்க கையாளும்
தந்திரமே
கவிதை

========================================

அமைதி வேண்டி
அலைவோருக்கு
அற்புதமே
கவிதை

========================================

அடையாள தெரியா
கனவுகளை
அடையாளம் கொள்வது
கவிதை

========================================

ஆன்மாவை சுருக்கி
அதிலிருந்து
எழுதப்பெறுவதும்
கவிதை தான்

========================================

எழுதியவர் : கோபி (20-Dec-14, 6:32 pm)
Tanglish : kavithai
பார்வை : 77

மேலே