அட போடா
திடுக்கிட்டேன்
திகைத்தேன் !!
என்னையும் சேர்த்து
எட்டு பெண்களாம்!!!
திருமண பத்திரிகையில்
அவன் பெயரையும்
என் பெயரையும்
கற்பனையில் பார்த்திருந்த
எனக்கு ,
தினப்பத்திரிகையில்
அதுவும் முதல் பக்கத்தில் ..
"காமவலை வீசிய வாலிபன் "
என்ற தலைப்பின் கீழ்
அவன் பெயரும் படமும்..
அழுதேன் ...
ஏமாந்ததை எண்ணி அல்ல,
அவன் நடிப்புத்திறனை
முறையாய் அரங்கேற்றினால்
இருக்கும் விருதுகள்
எல்லாம் பெற்றிருப்பான்...
காதல் என்ற பேரில்
காமம் மட்டும் சுகித்து
ஏன் ஏமாந்தான் ?..
அந்த ஐந்து நிமிட
அந்தரங்கம் அவ்வளவு
உயர்த்தியா?...
போகம் முடிப்பதில்
போதை கொள்வது
ஆண்மை அல்லவே!!!
போகட்டும் ...!
அது என்ன எட்டு பேர் ?..
எண்கணிதப் பரிகாரமோ?..
பெண்கள் கோடி என்றாலும்
பிறப்பிறப்பு போலவே
பிறப்புறுப்பு ஒன்று தானே ?..
சரிக்கு சமமாய்
அவனும் தான் இழந்தான் ..
இதிலென்ன பெருமை ?..
சுகம் இருபக்கமும்
இருக்கும் போது
சுற்றி சுற்றி
அவன் ஏமாற்றிக் கொண்டது
அவனைத்தானே!...
கண்ணீர் துடைக்கிறேன்
காதலிக்க உண்மையாய்
ஒருவன்
கிடைக்காமலா போவான்?!!!