விவசாயம்

உலகிற்கே அமுதளித்திடும் உயர்ந்த தொழில்
உழைக்கும் மக்களுக்கு உகந்த தொழில்
எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும் தொழில்
மிக்க மேன்மையுடை தொழில்.

கதிரவன் கருணையால் விளையும் தொழில்
சான்றோர்கள் யாவரும் போற்றும் தொழில்
விவசாயிகளின் வியர்வையால் விளையும் தொழில்
மிக்க கருணையுடை தொழில்.

பருவ மழையால் பெருகும் தொழில்
உலக வாழ்விற்கு உதவும் தொழில்
இயற்கை அன்னை இசைக்கும் தொழில்
மிக்க வண்மையுடை தொழில்.

தொழில்களி லெல்லாம் முதன்மை தொழில்
பசிப்பிணியை போக்கி தீர்க்கும் தொழில்
உண்டி கொடுத்து உயிர்கொடுக்கும் தொழில்
மிக்க சிறப்புடை தொழில்.

எழுதியவர் : நந்து (20-Dec-14, 10:54 pm)
Tanglish : vivasaayam
பார்வை : 151

மேலே