கவிதையென்பேன்
உன் விழியன் வழியே வழியும் திரவமும்
பிறை போல் பதிந்த புருவமும்
கவிதையடி....
பேசும் விழியும்
நீ பேசாத மொழியும்
உன் கண்ணை தழுவிய மையும்
பெண்மை எழுதிய மென்மையும்
கவிதையடி......
பூக்கள் பூக்கும் புன்னகையும்
உன் மார்பு தழுவும் நகையும்
கவிதையடி .....
பகல் நேர முனுங்கலும்
இரவின் சிணுங்கலும்
பொழுது முழுதும் பெண்ணவள் முழுதும்
கவிதையென்பேன் ......