என்னங்க உங்களைத்தான்

என்னங்க உங்களைத்தான் !
தயவு செய்து
தயங்காம
தாரள மனததொட
ஒரு ரூபா ரோசா பூவ வாங்குங்க ..
பார்வை பட்டாலே
வாடி வதங்கி விடும்-என்
ஒத்த ரோசா -இவ
அழகைக் கண்டால்
கண்ணாலே வெறுப்பைத் தூவி
பூவை சாகடிக்காதே -உன்
பார்வை பட்டதும் -தன்
பிறப்பு என நினைத்து இறந்து போய்விடும்
எத்தனையோ ரோசா இருந்தாலும் -என் வீட்டு ரோசா
உன் வீட்டு வாசலில் தான் தினமும்
காத்துக் கிடக்கும் -நீ
எப்பொழுது எடுத்துச் செல்வாய் என்று
உனக்கில்லாமல் -உன்
தோழிக்கு நான் தந்த வாடா ரோசாவை
தோழியே உன் கரங்கள் தீண்டினால் தான் -என்
கண்கள் தூங்கும் -நீ
சென்று என் என்னவளிடம்
நான் தந்த ஒற்றை ரோசாப் பூவை
கொடுத்தால் -என்
இமைகளும் இதமாக
மூடும்
தோழியே -நீதான்
என்னவளின் தற்போதைய
தபால் பெட்டி
பூக் கொண்டு செல்வதால்
என்னவளே உன் இதயத்தால்
கையொப்பம் இட்டு இதை வாங்கிக் கொள்ளடி-உன்
தோழியிடம் இருந்து
நான் வாழா விட்டாலும் -என்
ஒரு ரூபா ஒத்த ரோசா வாழட்டும் -உன்
வீட்டிலே அடைபட்டு !
(இவையாவும் கற்பனையே )ஹா ஹா