இந்த இராத்திரியில் நீங்கள்

என்
இறுதிக்கனவை
எழுதிய இராத்திரி
முறிந்துகிடக்கிறது!!!
அங்குதானே
என் விம்பங்கள்
சிறகு கழைந்தன!!
கண்ணாடி
அறைக்குள்ளா
சயனித்திருந்தேன்!!
இதய பாறையோடு!!
எதைத்தான் இறந்த
இராத்திரி பதுக்கி
வைத்திருக்க கூடும்!
இறுதி கணத்திலேனும்
எரியூட்ட வருவான்
எனக்காத்திருக்கும்
தாய் முகத்தையா!!??
கருவாய்
இருந்த மகனின்
கனிவான மழலை
மொழிகளையா!!
கட்டியவளின்
உணர்வுகளையா??
ஈடுவைத்த
நிலத்தின்
பெருமூச்சினையா??
இந்த மாத
பணத்திலேனும்
இளையவளின்
திருமணத்தை
நடாத்தலாம் எனும்
அப்பனின்
ஆசைகளையா???
வெட்டியாய்
நான் தரித்து நின்ற
சந்திகளின்
தவிப்பினையா??
நான் வைத்தால்
மட்டுமே
உண்ணும் நாயின்
அழுகையினையா?
உறவுக்காற
வேசம் கலக்காத
முகங்களையா??
இல்லை
இதுவரை நான்
ஏங்கித்தவிக்கும்
வெளிநாட்டு
வாழ்வுரிமைக்கான
ஆதங்கத்தினையா??
ஏதோ ஒன்று
பதுங்கி கிடக்கிறது
இறந்து கிடந்த
என் இராத்திரியில்!!
யாரும்
விளங்கமுடியா!
என் துன்பங்கள்
போல அவைகளும்!!
போகட்டும் விடுங்கள்
போய் வருகிறேன்
எச்சில் கோப்பைகள்
காத்திருக்கின்றன
எனக்காய்!!!!