மனித குணம்
வாய் அடைத்து பொய் நின்றேன்
வயல் வெளிகளின் அழகினியே......
மெய் மறந்து நான் நடந்தேன்
கடற்கரையின் மணலினிலே.....
கண்கள் இமைக்காமல் பார்த்தேன்
வான் வெளியின் ஜாலத்தினை.....
என்னை அறியாது ஏதேதோ செய்தேன்
இயற்கையின் அழகினிலே......
என்னை உலகமட இது?...
எவர் செய்த வேலையாட இது?....
இத்தனை அழகினை படைத்த இறைவா
ஏன் இந்த மனித குலத்தினைப் படைத்தாய்?.....
நீ படைத்த அற்புத படைப்புக்களை
அழிக்கவே பிறந்திற்றான் மனிதன்.......