மதுவை மாய்க்க புரட்சி - உதயா
மதுகுடித்த மனிதன்
மதிமயங்கி
சாலையோரத்தில் சாக்கடையின்
பக்கத்தில் வீழ்ந்திருக்க
வீட்டருகே வந்த
பகையாளியை கண்டு
கொசுக்கள் போர்புரிய
தொடங்கின உணர்வில்லா உடலோடு
பாரில்
மனம் கொண்ட
இளம் துளிர்கள் மருவியது
உதவ நெருங்கியது
மதியில்லா மனிதனோ
துளிர்களை மண்ணில் தூக்கெரிய
பகைகொண்ட கொசுகளும்
கண்ணீர்விட தொடங்கியதே....
மதுயில்லா உலகை காண
மனமில்லா கொசுவும் துடிக்க
மதியில்லா மனிதன் மதிப்பின்றி
அலைகிறானே மதுவினாலே
அரசாங்கம் அமைதியாக அடுத்தடுத்து
தொரக்குது புது புது மதுகடையாக
விஷமென அறிந்தும் மனிதமனம்
மதுவை நடவே நினைக்குது
நெஞ்சம் துடிக்குது
குருதி கொதிக்குது
மதுவினை மாய்த்து
உலகில் மனிதனை காணவே.............